ADDED : ஆக 19, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்,
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.
கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். எச்.ஐ.வி., குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலியில் கல்லுாரி மாணவ, மாணவியர், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆட்டோக்களில் எய்ட்ஸ் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டினர்.நிகழ்ச்சியில், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் சாந்திமலர், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர் (பொ) சுமதி உள்பட பலர் பங்கேற்றனர்.