/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க விழிப்புணர்வு தேவை
/
மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க விழிப்புணர்வு தேவை
மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க விழிப்புணர்வு தேவை
மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க விழிப்புணர்வு தேவை
ADDED : ஜூலை 25, 2025 12:58 AM
கரூர், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட, 30 பஞ்சாயத்துகளில் போதிய மழை இல்லை. இங்கு, நிலத்தடிநீர் மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. சில கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
புதிய வீடுகள் கட்டும்போது, கட்டாயம் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் பொதுமக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு இல்லை.
எனவே, வீடு வீடாக சென்று மழைநீர் சேமிப்பு திட்டம் குறித்து விளக்கம் அளிப்பது, பொது இடங்களில் பேரணி, துண்டு பிரசுரம் வினியோகம் போன்ற நடவடிக்கைகளை உள்ளாட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.