/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்
/
வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்
ADDED : பிப் 22, 2024 07:27 AM
கரூர் : கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வணிகவரித்துறை மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
டி.ஆர்.ஓ., (நிலம் எடுப்பு) கவிதா தலைமை வகித்தார். உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் ஒப்பந்த பணிகளின் போது வரி பிடித்தம் செய்வது தொடர்பாகவும், அதனை அரசு கணக்கில் தாக்கல் செய்து செலுத்துவது குறித்தும், மாவட்ட வணிக வரித்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.
கூட்டத்தில், வணிக வரித்துறை துணை ஆணையர் சசிரேகா, சப்-கலெக்டர் சைபுதீன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சரவணன், உதவி இயக்குனர் (தணிக்கை) இந்திராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.