/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
/
கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
ADDED : ஜூலை 31, 2025 01:49 AM
குளித்தலை,  கரூர் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பாக, தோகைமலை யூனியன்  பகுதியில், மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தோகைமலை பஸ் ஸ்டாண்டில் நடந்த நிகழ்ச்சிக்கு மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலகிருத்திகா தலைமை வகித்தார். குளித்தலை கலால் தாசில்தார் செந்தில், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பறையாட்டம், கரகாட்டம், நாடகம் உள்பட பல்வேறு விழிப்புணர்வு பாடல்கள் மூலம் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. அப்போது மது நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு, காசநோய், உயர்ரத்த அழுத்தம் ஏற்பட்டு இதயத்தில் வீக்கம் ஏற்படுகிறது. கண்பார்வை மங்குதல், கைகால் சேர்வு, வலிப்பு ஏற்படுகிறது. குடி பழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்துவது, மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம் ஏற்படுகிறது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மதுபானம், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை ஒழிப்போம் என கூறி, அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

