தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

கரூரில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

கரூரில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : மார் 28, 2026 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 04:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்; கரூர், தளவாப்பாளையம் குமார சாமி பொறி-யியல் கல்லுாரியில், 100 சதவீதம் வாக்களிக்கும் விதமாக, முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட தேர்தல் உதவி அலுவலர் விமல்ராஜ் தலைமை வகித்தார். 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, வாக்காளர்களிடையே விழிப்பு-ணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசு-ரங்கள் வழங்கப்பட்டன. மேலும் பேரணி, கோலங்கள், வாக்காளர் உறுதி மொழி உள்ளிட்-டவை மூலம் பல்வேறு விழிப்புணர்வு நடவ-டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில், - 100 சதவீதம் என்ற வடிவத்தில் நின்றும், கையெழுத்து இயக்கம் மற்றும் சுய புகைப்படம் எடுத்தல் ஆகிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம், முதல் தலைமுறை வாக்காளர்-களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், வேலாயுதம்பாளையம் மகளிர் சுயஉதவி குழு-வினர் 'நம் வாக்கு நம் பலம்' என்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய கோலங்களை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில், மகளிர் திட்ட அலுவலர் தனசே-கரன், புகழுர் தாசில்தார் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us