/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஏப் 28, 2024 03:49 AM
கரூர்: கரூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கலையரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
டி.ஆர்.ஓ.,கண்ணன் தலைமை வகித்தார். தன்னார்வ இயக்க ஒருங்கிணைப்பாளர் மதி பங்கேற்று, ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் பிளஸ் -2 முடித்த பின் என்ன படிக்கலாம், எந்தெந்த உயர்கல்வி நிறுவனங்களை தேர்வு செய்யலாம் என்பது குறித்து விளக்கினார். கரூர், தான்தோன்றிமலை, அரவக்குறிச்சி, க.பரமத்தி, குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்டாரங்களில், அரசு பள்ளிகளில் பிளஸ்- 2 பயிலும், 207 மாணவ, மாணவிகளும், பிளஸ்- 1 பயிலும் 61 மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சண்முகவடிவேல், கரூர் ஆர்.டி.ஒ., முகமது பைசல், ஆதிதிராவிட நல இயக்குனரக சிறப்புத் திட்ட அலுவலர் ராஜா ஜெகஜீவன், தாட்கோ மாவட்ட மேலாளர் பாலமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.