/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜன 29, 2025 07:15 AM
குளித்தலை: குளித்தலை, காந்தி சிலை எதிரில் நேற்று மாவட்ட கலால் துறை சார்பில், மதுவின் தீமைகள் குறித்து, விழிப்புணர்வு பிரசார நாடக கலை நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட கலால் உதவி ஆணையர் கருணாகரன் தலைமை வகித்தார். குளித்தலை கலால் தனி தாசில்தார் வெங்கடேசன், ஆர்.ஐ., தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குடி பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து, நடனமாடியும், பாடல்கள் மூலமும் கலைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், குடி பழக்கத்தால் உடலில் ஏற்படும் தீமைகள், குடும்பம் சீரழிவு, மனைவி, மகன், மகள்களை சரிவர கவனிக்காமல் பாதிப்பு ஏற்படுவது குறித்து பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் கலால் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.