/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
/
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 29, 2025 01:03 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பாக, போதை பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
முதல்வர் காளீஸ்வரி தலைமையில் நடந்த பேரணியில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
பேரணி அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் வரை சென்று, முக்கிய வீதிகள் வழியாக கல்லூரிக்கு திரும்பியது. மாணவ, மாணவியர் போதை பொருட்களுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கல்லூரி மாணவ, மாணவிகள் போதைப் பொருள்களினால் ஏற்படும் தீமைகளையும், குடியிருப்பு பகுதி, வணிக நிறுவனங்களுக்கு சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கல்லுாரி போதை பொருட்கள்ள் எதிர்ப்பு குழு உறுப்பினர்கள் முனைவர்கள் அருண், முரளி, கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.