/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலையில் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி
/
குளித்தலையில் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி
குளித்தலையில் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி
குளித்தலையில் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி
ADDED : மே 02, 2025 01:50 AM
குளித்தலை, மே 2
குளித்தலை, ஸ்ரீ நீலமேகப் பெருமாள் இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் உரிமையாளர் நல சங்கம் சார்பில், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, பைக்கில் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
குளித்தலை பெரிய பாலத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் நந்தகுமார், பாஸ்கர் ஆகியோர் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர். இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி மாரியம்மன் கோவில், கடைவீதி, பஸ் ஸ்டாண்டு, காந்தி சிலை வழியாக திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் சுங்க வாயில், ரயில்வே கேட்டில் முடிவுற்றது.
ஸ்ரீ நீலமேகப் பெருமாள் இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் உரிமையாளர் நல சங்க கவுரவத்தலைவர் ஜெயக்குமார், மாநில துணைத் தலைவர் பெரியசாமி, செயலாளர் பழனிவேல். பொருளாளர் இளங்கோவன். மாநில செயற்குழு உறுப்பினர் துரைராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் போலீசார் பேரணியில் கலந்து கொண்டனர்.