/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி
/
நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி
நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி
நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 26, 2025 04:44 AM
அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி நகராட்சி சார்பில், நெகிழி பயன்பாட்டை தவிர்ப்-பது குறித்த, விழிப்புணர்வு பேரணி பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனவர் ஜான் தலைமையில் நேற்று நடைபெற்றது.
நகராட்சி ஆணையர் ஆர்த்தி முன்னிலை வகித்தார். பள்ளப்-பட்டி மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமை படை மாணவர்கள், 200க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நெகிழி பயன்படுத்துவதால் ஏற்-படும் தீமைகள், அதனை தவிர்த்து மஞ்சள் பையை பயன்படுத்து-வது குறித்து விளக்கினர்.
பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனத்தில் விழிப்புணர்வு ஏற்-படுத்துவதற்காக, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. உணவு பொருட்கள் கட்ட பயன்படுத்தப்படும் நெகிழித்தாள் உறை, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட தட்டுகள், மெழுகு பூசப்பட்ட கப்புகள், பிளாஸ்டிக் குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கொடிகள் ஆகிய-வற்றை தவிர்த்து மஞ்சள் பையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்-டது.

