/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆயத்தீர்வை துறை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
ஆயத்தீர்வை துறை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ஆயத்தீர்வை துறை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ஆயத்தீர்வை துறை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : ஜூலை 13, 2024 08:18 AM
கரூர்: கரூர் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், அரசு கலைக்கல்லுாரியில் நேற்று, விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.அதில் மதுபானம், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், சட்ட விரோத மதுபானங்கள் மற்றும் போதை பொருட்கள் விற்பனை குறித்த தகவல்களை, கட்டணம் இல்லாத தொலைப்பேசி எண், 10581 மற்றும் வாட்ஸ் ஆப் எண், 949 84-10581 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என, கரூர் கோட்ட கலால் அலுவலர் செந்தில் குமார் விளக்கம் அளித்து பேசினார்.
கருத்தரங்கில், கலால் உதவி ஆணையர் கருணாகரன், குளித்தலை கலால் கோட்ட அலுவலர் வெங்கடேசன், அரசு கலைக் கல்லுாரி முதல்வர் அலெக்ஸாண்டர், கரூர் தாசில்தார் குமரேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.