தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 'குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'

'குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'

'குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'


ADDED : மே 15, 2026 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 05:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர் ''குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திட, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என, கலெக்டர் ரவிகுமார் தெரிவித்தார்.

கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கோடை காலத்தில் குடிநீர் வினியோகம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் ரவிகுமார் பேசியதாவது:

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரிய, மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்., மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் திட்டத்தின் கீழ் வினியோகம் செய்யப்படும் குடிநீர் அளவு மற்றும் நிலுவையில் உள்ள குடிநீர் திட்டப்பணிகளை

விரைந்து முடிக்க வேண்டும்.மின் மோட்டார், குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யவும். அவ்வப்போது வரும் புகார்கள் தொடர்பாக உடனடியாக நேரில் கள ஆய்வு மேற்கொண்டு, உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் பற்றாக்குறையை சமாளித்திட ஏதுவாக, முறையற்ற குடிநீர் இணைப்புகளை ஆய்வு செய்து துண்டிப்பு செய்ய வேண்டும். அனைத்து வீடுகளுக்கு குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைவரும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

கூட்டத்தில் குளித்தலை சப்-

கலெக்டர் சுவாதிஸ்ரீ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன், மாநகராட்சி கமிஷனர் சுதா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பார்த்தசாரதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us