நான்கு வண்ண வாளிகள் மூலம் குப்பை சேகரிக்க விழிப்புணர்வு
நான்கு வண்ண வாளிகள் மூலம் குப்பை சேகரிக்க விழிப்புணர்வு
ADDED : ஜூன் 24, 2026 04:26 AM

அரவக்குறிச்சி:சின்னதாராபுரத்தில்,
நான்கு வண்ண வாளிகள் மூலம் குப்பை சேகரிப்பது குறித்து
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செயல் விளக்கம் செய்து
காட்டப்பட்டது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சின்னதாராபுரம்
ஊராட்சி யில், பொதுமக்களிடம் மட்கும் குப்பை, மட்காத குப்பையை தரம்
பிரித்து வாங்குவது குறித்து விழிப்புணர்வு செயல்விளக்க
நிகழ்ச்சி நடந்தது. வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் பொன்னுச்சாமி
தலைமை வகித்து, நான்கு வெவ்வேறு வண்ண வாளிகளை பயன்படுத்தி குப்பை
சேகரிப்பது குறித்து விளக்கமளித்தார். ஊராட்சி ஒன்றிய வட்டார
அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் சின்னதாராபுரம் ஊராட்சி
செயலாளர் ஆறுமுகம் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் நடந்தது. இதில்
ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
