/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அய்யர்மலை 'ரோப இன்று, நாளை நிறுத்தம்
/
அய்யர்மலை 'ரோப இன்று, நாளை நிறுத்தம்
ADDED : ஜன 27, 2025 03:02 AM
குளித்தலை,: குளித்தலை அடுத்த, அய்யர்மலையில் ரெத்தின
கிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சிவாலயங்களில் சிறந்த ஸ்தலமாக இக்கோவில் திகழ்கிறது. ஹிந்து சமய அறநிலையத்-துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. செங்குத்தாக, 1,017 படிகளை கொண்டது. இதனால், முதியவர்கள், மாற்றுத்திறனாளி பக்தர்கள் மலை ஏறி சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில், கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, பொதுமக்கள் பங்களிப்பு தொகையுடன், 'ரோப் கார்' வசதி ஏற்படுத்தப்பட்டது. கடந்த, இரண்டு மாதங்களாக 'ரோப் கார்'
வசதியை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் தங்கராஜீ கூறுகையில், ''அய்யர்-மலை, 'ரோப் கார்' மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, இன்று, நாளை ஆகிய இரண்டு நாட்கள் செயல்படாது. இதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.

