/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அய்யர்மலை ரோப்கார் மூன்று நாள் நிறுத்தம்
/
அய்யர்மலை ரோப்கார் மூன்று நாள் நிறுத்தம்
ADDED : டிச 24, 2025 09:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: பராமரிப்பு பணிகளுக்காக, அய்யர்மலை ரோப்கார் மூன்று நாள் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இது குறித்து, அய்யர்மலை கோவில் செயல் அலுவலர் தங்கராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குளித்தலை அடுத்த அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இக்கோவிலில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ரோப் கார் பக்தர்கள், பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ரோப்கார் (கம்பி வட ஊர்தி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்று முதல் 26ம் தேதி வரை மூன்று நாட்கள் ரோப்கார் இயங்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

