sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அவசர கதியில் அய்யர்மலை கோவில் ரோப் கார் சேவை: துவங்கிய 2வது நாளில் பழுதான பின்னணி விசாரிக்கப்படுமா?

/

அவசர கதியில் அய்யர்மலை கோவில் ரோப் கார் சேவை: துவங்கிய 2வது நாளில் பழுதான பின்னணி விசாரிக்கப்படுமா?

அவசர கதியில் அய்யர்மலை கோவில் ரோப் கார் சேவை: துவங்கிய 2வது நாளில் பழுதான பின்னணி விசாரிக்கப்படுமா?

அவசர கதியில் அய்யர்மலை கோவில் ரோப் கார் சேவை: துவங்கிய 2வது நாளில் பழுதான பின்னணி விசாரிக்கப்படுமா?

2


ADDED : ஜூலை 27, 2024 01:26 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 01:26 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில், அறநிலையத்துறை கட்-டுப்பாட்டில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து, 1,117 அடி உயரத்-திலும், செங்குத்தாக, 1,017 படிகள் கொண்டுள்ளது.

அடிவாரத்தில் இருந்து மலையில், 750 மீட்டர் துாரத்தில் கோவில் உள்ளது. இங்கு, 2011ல், 6.70 கோடி ரூபாய் மதிப்பில் ரோப் கார் பணிகள் தொடங்கி மந்தமாக நடந்தது. பணிகளை கோல்கட்டாவைச் சேர்ந்த ஆர்.ஆர்.பி.எல்., நிறுவனம் மேற்-கொண்டது. 2021ல் வேலை முடிக்கப்பட்டு, பல கட்டங்காக சோதனை ஓட்டம் நடந்தது. கடந்த, 24ல் ரோப் கார் சேவையை முதல்வர் ஸ்டாலின் காணொலியில் தொடங்கி வைத்தார். ரோப் காரில் ஒரே நேரத்தில் மேல், கீழ் பாதையில் 8 பெட்டிகள் இயக்கப்படுகின்றன. கடக்கும் துாரம், 445 மீட்டர். பயண நேரம், 3 - 5 நிமிடம். சேவை துவங்கிய மறுநாளே ரோப் கார் பழுதாகி பாதியில் நின்-றது. இரண்டு மணிநேரப் போராட்டத்திற்குப் பின் பக்தர்கள் மீட்-கப்பட்டனர்.

மூன்று ஆண்டுகளுக்கு மேல் ரோப்கார் சோதனை ஓட்டம் நடத்தி, மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், துவங்கிய மறுநாளே ரோப் கார் அந்த-ரத்தில் நின்றதால் பக்தர்கள் பீதி அடைந்தனர். ரோப் கார் திட்டத்தை நிறைவேற்றும்போது, அங்கு நிலவும் வெப்பநிலை, காற்றின் அளவு உட்பட இயற்கை சூழ்நிலைக்கு ஏற்றவாறு திட்டத்தை வடிவமைக்க வேண்டும். அப்படி வடிவ-மைக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆடி மாதம் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அந்த வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமால் ரோப்காரின் சக்கரமும், கம்பியும் தனித்தனியாகப் பிரிந்துள்ளதால் பிரச்னை ஏற்பட்டுள்-ளது. அய்யர்மலை பகுதியில் எந்த வேகத்தில் காற்று வீசும் என கணித்து, அதற்கு ஏற்ப திட்டமிட்டிருக்க வேண்டும். மேலும், ரோப் கார் பணியில், தரமான பொருட்கள் பயன்படுத்-தப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எந்த அதிகா-ரிகள் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கி, ரோப் கார் சேவை துவங்கப்பட்டுள்ளது என, வெளிப்படையாகக் கூற அதிகாரிகள் மறுக்கின்றனர். மக்கள் உயிரோடு விளையாடாமல், இதன் உறு-தித்தன்மைக்கு உத்தரவாதம் வழங்கி, பின் சேவையை தொடங்க வேண்டும்.

அனைத்திந்திய ஹிந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்க கரூர் மாவட்ட செயலர் பி.கருணாநிதி கூறியதாவது: அய்யர்மலையில் ரோப் கார் செல்லும் பாதையில், சிறிய மலைக்குன்றுகள் கிடையாது. மலை உச்சியில் ரோப் கார் பழு-தாகி நின்றால், அதில் சிக்கியவர்களை மீட்பது கடினம். அவர்-களை காப்பாற்ற ஒரே வழி ரோப் கார் பழுதை சரிசெய்ய வேண்டும் அல்லது மீட்புப் படையினர் உதவியுடன் தான் மீட்க முடியும். இதில், கம்பியை இழுக்கும் 'வீல்' உயரம் குறைவாக உள்ளது. பலத்த காற்று அடித்தபோது, வீலில் இருந்து கம்பி நழுவி விழுந்-ததால் தான் நேற்று முன்தினம் ரோப் கார் நகர முடியாமல் நின்-றது. பெயருக்கு சோதனை நடத்தி, அவசர கதியில் சேவை துவக்-கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும்.

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் ரோப் கார் பொறியாளர் மாசிமலை கூறியதாவது: ரோப் கார் இயக்கத்தில் பல பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்ப-டுகின்றன. இதில் பொருத்தப்பட்டுள்ள கம்பிகள், வீல் மிகவும் தரமானவை. மலைப்பகுதியில், 50 கி.மீ.,க்கு மேல் காற்றின் வேகம் இருக்கும் என்பதால், ரோப் கார் இயந்திரத்துடன், காற்றின் அளவை கணிக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. 40 கி.மீ.,க்கு மேல் காற்று வீசினால், தானியங்கி கருவி ரோப் கார் இயக்கத்தை நிறுத்தி விடும். அப்படியும் ரோப் கார் பழுது ஏற்-பட்டு பாதியில் நின்றாலும், அவர்களை மீட்க பாதுகாப்பு கரு-விகள் உள்ளன. நேற்று முன்தினம் திடீரென பலத்த காற்று வீசி-யதால், வீலில் இருந்து கம்பி நழுவியதால் ரோப் கார் இயக்கம் நின்றது. அதில், பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்புக் கருவிகள் கார-ணமாக, ரோப் காரில் சிக்கிய பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்ப-டவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us