/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆசாத் பூங்கா முழு நேரம் செயல்பட வலியுறுத்தல்
/
ஆசாத் பூங்கா முழு நேரம் செயல்பட வலியுறுத்தல்
ADDED : டிச 16, 2024 04:03 AM
கரூர்: கரூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள ஆசாத் பூங்காவுக்கு, பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த பூங்-காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், முதிய-வர்கள் அமர்ந்து இளைப்பாறும் வகையில் இருக்கைகள் போன்-றவை அமைக்கப்பட்டு, நவீன மயமாகப்பட்டுள்ளன.
ஆனால், இப்பூங்கா பெரும்பாலான நேரங்களில் பூட்டியே கிடக்கிறது. இதனால் பூங்காவுக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள், ஏமாற்-றத்துடன் செல்கின்றனர்.பூங்கா காலை, 8:00 மணி முதல், 10:00 மணி வரையிலும், மாலை, 4:00 மணி முதல், 6:00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். எப்போதும் பூங்கா திறந்திருந்தால் வழிப்போக்கர்களின் இருப்பிடமாக மாறிவிடுகிறது. ஆதர-வற்றோர் சிலர் பூங்காவிற்குள்ளே இருந்து விடுகின்றனர். காலை, மாலை தலா, 2 மணி நேரம் மட்டுமே பூங்கா திறந்திருக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.எனவே, நகரின் மையப்ப-குதியில் உள்ள இந்த பூங்காவுக்கு, காவலாளியை நியமித்து காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரையாவது பூங்கா திறந்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கரூர் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

