/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தமிழ் நகரில் மோசமான சாலை; வாகன ஓட்டிகள் தவிப்பு
/
தமிழ் நகரில் மோசமான சாலை; வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : பிப் 12, 2025 07:18 AM
கரூர்: கரூர், தெற்கு காந்திகிராமம் தமிழ் நகரில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்.கரூர், தெற்கு காந்திகிராமம் அருகில் உள்ள தமிழ் நகரில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
அந்த வழியாக, 30க்கும் மேற்பட்ட தெருக்களுக்கு பொதுமக்கள், வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில், சில இடங்களில் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பல இடங்களில் சாலை இல்லாமல் மண் சாலையாக இருக்கிறது. பள்ளம் மேடான சாலையில், இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுகின்றனர். மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால், மக்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.