/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோவில் செப்டிக் டேங்க் கழிவு நீர் தெப்பக்குளத்தில் கலப்பதால் துர்நாற்றம்

ADDED : டிச 10, 2024 02:09 AM
குளித்தலை, டிச. 10-
குளித்தலை அடுத்த, அய்யர்மலையில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நேற்று நான்காவது சோம வார விழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். ரோப்கார் அமைந்துள்ள இடத்தில், 35 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கழிவறையில் இருந்து, மலக்கழிவுகளுடன் கழிவு நீர் வெளியேறி வருகிறது.
இந்த கழிவு நீர், அருகில் உள்ள தெப்பக்குளத்தில் கலக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கழிவு நீரை மிதித்து, தான் வருகின்றனர். மேலும் கழிவு நீர், தெப்பக்குளத்தில் கலப்பதால் துர்நாற்றம் வீசி வருவதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கார்த்திகை சோம வார விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில், நான்கு வாரங்களாக இந்த நிலை தொடர்ந்து வருகிறது.