ADDED : ஏப் 15, 2024 03:15 AM
அ நிறம் | அளவு
குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மேட்டுமருதுார், தேவேந்திர குல தெருவில் உள்ள மாரியம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
தமிழ் புத்தாண்டையொட்டி, ஆண்டுதோறும் பால்குடம் ஊர்வலம் நடப்பது வழக்கம். அதன்படி, 35ம் ஆண்டாக நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது. பக்தர்கள், மருதுார் காவிரி ஆற்றில் இருந்து பால் குடம், தீர்த்தக்குடம் எடுத்து முருகன் கோவில், செல்லாண்டி அம்மன் கோவில், முக்கிய தெரு வழியாக சென்று, மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இதில் நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு, அம்மன் முக்கிய வீதி வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
