/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 13, 2024 07:38 AM
கரூர்: கரூர் மாவட்ட, பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் கூடுதல் நேரத்தில் மது விற்பனையை தடுக்க டாஸ்மாக் நிர்வாகம், காவல் துறை மற்றும் கலால் துறை சார்பில் தனிப்படை அமைக்க வேண்டும். டாஸ்மாக் மதுபான கடைகளில் கேமரா பொருத்தப்பட்டு, 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்பனையை தடுக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மற்றும் தொழில் நிறுவனங்கள் இயங்கும் பகுதிகளில் மது விற்பனை, போதை பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணை செயலாளர்கள் ராஜா, வேலுமணி, மகாளி, அமைப்பு செயலாளர் முருகன், இளைஞர் அணி செயலாளர் முத்து, நகர தலைவர் பாலமுருகன், செயலாளர் ராக்கி முருகேசன் உள்பட, பா.ம.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.