/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 18, 2024 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட துணை செயலாளர் சதீஷ் தலைமையில், சாமிநாதபுரத்தில், நேற்று நடந்தது.
அதில், வரும் எம்.பி., தேர்தலில் பா.ம.க., கூட்டணி அமைக்கும் கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கஞ்சா மற்றும் லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட பா.ம.க., செயலாளர் சுரேஷ், அமைப்பு தலைவர் குணா, செயலாளர் குணசீலன், வன்னியர் சங்க செயலாளர் பசுபதி, இளைஞரணி செயலாளர் சரவணன், கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

