/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே குளத்தின் கரை பகுதிகள் உடைப்பு: பொதுமக்கள் பகீர் புகார்
/
கரூர் அருகே குளத்தின் கரை பகுதிகள் உடைப்பு: பொதுமக்கள் பகீர் புகார்
கரூர் அருகே குளத்தின் கரை பகுதிகள் உடைப்பு: பொதுமக்கள் பகீர் புகார்
கரூர் அருகே குளத்தின் கரை பகுதிகள் உடைப்பு: பொதுமக்கள் பகீர் புகார்
ADDED : பிப் 17, 2024 01:43 PM
கரூர்: கரூர் அருகே, சீரமைக்கப்பட்ட குளத்தின் கரைகள் உடைக்கப்பட்டதாக, பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் எழுந்துள்ளது.
கரூர் மாவட்டம், காதப்பாறை பஞ்சாயத்து வெண்ணைமலையில், பல ஆண்டுகளாக குளம் உள்ளது. அதை கடந்த, அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் (2019-20) நீர்வள ஆதார பாதுகாப்பு இயக்கம் மற்றும் குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ், 54 ஆயிரம் ரூபாய் செலவில் துார்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கியதால், அந்த பகுதியில் உள்ள கிணறுகள், போர்வெல்களில் தண்ணீர் வரத்து இருந்தது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் குளத்தின் கரைகளை, சாலை விரிவாக்கம் என்ற பெயரில், உடைக்கப்பட்டதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: வெண்ணைமலை குளம் பல ஆண்டுகளாக உள்ளது. அதில், தேங்கும் தண்ணீரில் பொது மக்கள் குளித்து விட்டு அருகில் உள்ள, பாலசுப்பிரமணிய கோவிலுக்கு செல்வது வழக்கம். நாளடைவில் நீர் வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு காரணமாக, குளத்துக்கு தண்ணீர் வருவது நின்றது.
இதையடுத்து கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் குடிமராமத்து பணிகள் கீழ், குளம் துார் வாரப் பட்டதால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில், சாலை விரிவாக்கம் என்ற பெயரில், குளத்தின் கரைகள் இடிக்கப்பட்டு, கரையில் இருந்த மண் குளத்தில் கொட்டப்பட்டுள்ளது.
மேலும், குளத்தின் கரையில் கடந்த, 2016-17ல், அ.தி.மு.க., ஆட்சியின் போது, நான்கு லட்சத்து, 90 ஆயிரம் ரூபாய் மதிப்பில் போர்வெல் குழாய் அமைக்கப்பட்டது. அந்த போர்வெ ல் குழாயையும் காணவில்லை. இதனால், குளத்தின் கரைகளை உடைத்தவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் குளத்தின் கரைகளை, பலப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.