/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பட்டா வழங்காமல் அலைக்கழிப்பு தேர்தலை புறக்கணிப்பதாக 'பேனர்'
/
பட்டா வழங்காமல் அலைக்கழிப்பு தேர்தலை புறக்கணிப்பதாக 'பேனர்'
பட்டா வழங்காமல் அலைக்கழிப்பு தேர்தலை புறக்கணிப்பதாக 'பேனர்'
பட்டா வழங்காமல் அலைக்கழிப்பு தேர்தலை புறக்கணிப்பதாக 'பேனர்'
ADDED : ஏப் 08, 2024 07:31 AM
குளித்தலை : குளித்தலை நகராட்சி, 15வது வார்டு பகுதியில், தேர்தலை புறக்கணிப்பதாக அப்பகுதி மக்கள் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.
அந்த பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கரூர் மாவட்டம், குளித்தலை நகரம், 15வது வார்டு, காவிரி நகர், 10வது குறுக்கு தெரு மற்றும் கிரி தெரு சர்வே எண், 81ல் குடியிருக்கும் குடியிருப்புகாரர்களாகிய நாங்கள், ரிஜிஸ்டர் ஆபீசில் கிரயம் பெற்று, 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகள் கட்டி குடியிருந்து வரும் நிலத்திற்கு பட்டா கேட்டு தொடர்ந்து போராடி வந்தோம்.
ஆனால், வருவாய் துறையினர் பட்டா வழங்காமல் எங்களை புறக்கணித்து வந்தனர். அதனால், கடந்த, 2014ல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தோம். கடந்த, 2023 மார்ச், 3ல் எங்களுக்கு சாதகமாக, எட்டு வார காலக்கெடுவிற்குள் பட்டா வழங்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாமல், காலம் தாழ்த்தி எங்களை அலைக்கழித்து வருகின்றனர். எங்களுக்கான உரிமையை மறுக்கும் வருவாய் துறை, கரூர் கலெக்டர், டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ., தாசில்தார் ஆகியோரை கண்டித்து, 56 குடும்பங்களை சேர்ந்த, 300-க்கும் மேற்பட்டோர் வரும் லோக்சபா தேர்தலை புறக்கணிக்கிறோம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

