ADDED : ஏப் 26, 2025 01:21 AM
குளித்தலை:குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், நேற்று வழக்கறிஞர் சங்கத்தின் 2025 முதல் 2027ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
சங்கத்தில், 199 வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தலைவர் பதவிக்கு சாகுல் அமீது, மனோகரன் ஆகியோரும், செயலாளர் பதவிக்கு சரவணன், நீலமேகம் ஆகியோரும், துணைத்தலைவர் பதவி மற்றும் இணைச்செயலாளர் பதவிக்கு தலா மூவர், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 12 பேர் என மொத்தம், 22 பேர் போட்டியிட்டனர். வக்கீல்கள் முருகானந்தம், விஜயசாரதி ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக செயல்பட்டனர்.
தேர்தலில் துணைத்தலைவர் பதவி (பெண்) சரண்யா, பொருளாளர் பதவிக்கு மாணிக்கவேல் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். பின் நடந்த தேர்தலில், தலைவராக சாகுல் அமீது, செயலாளராக சரவணன், துணைத் தலைவராக செல்வகுமார், இணை செயலாளராக ராஜகோபால் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.