/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் கூடைப்பந்து குழு பொதுக்குழு கூட்டம்
/
கரூரில் கூடைப்பந்து குழு பொதுக்குழு கூட்டம்
ADDED : ஏப் 17, 2025 01:59 AM
கரூர்:கரூர் கூடைப்பந்து குழுவின் பொதுக்குழு கூட்டம், தலைவர் பாஸ்கர் தலைமையில் தனியார் ஓட்டலில் நடந்தது.
அதில், வரும் மே., 22 முதல், 27 வரை கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டிகளை நடத்துவது, ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளை பங்கேற்க செய்வது, கூடைப்பந்து போட்டி நடக்கும் நாட்களில், செல்பி ஸ்டேஜ் அமைப்பது, புதிய நன்கொடையாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களை ஏற்படுத்துவது, குழுவின் கணக்குகளை தணிக்கையாளரிடம் வழங்குவது உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், துணைத்தலைவர்கள் சூர்ய நாராயணன், சண்முக சுந்தரம், பாலசுப்பிரமணியம், செயலாளர் முகமது கமாலுதீன், இணை செயலாளர்கள் முகமது அமீன், வெங்கடேஷ் உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.