/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் கூடைப்பந்து குழு தலைவர் தகவல்
/
வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் கூடைப்பந்து குழு தலைவர் தகவல்
வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் கூடைப்பந்து குழு தலைவர் தகவல்
வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் கூடைப்பந்து குழு தலைவர் தகவல்
ADDED : மே 19, 2025 01:45 AM
கரூர்: 'கரூர் மாவட்டத்தை சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர், வீராங்க-னைகளுக்கு பதக்கம் வழங்கப்படுகிறது' என, கூடைப்பந்து குழு தலைவர் பாஸ்கர் தெரி-வித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் கூடைப்பந்து குழு சார்பில், வரும், 22 முதல், 27 வரை கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் அகில இந்திய அளவில் கூடைப்பந்து போட்டி நடக்கிறது. அதில், ஆண், பெண் அணி-யினர் பங்கேற்க உள்ளனர். அப்போது, கரூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் எந்த விளையாட்டாக இருந்தாலும், கடந்த, 2024-25ம் ஆண்டில் பங்கு பெற்று, பார்ம்-1 பெற்றவர்க-ளுக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டு, பாராட்டப்பட
உள்ளனர்.
எனவே, தகுதியான வீரர், வீராங்கனைகள் நாளைக்குள், 9843347862 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு, கூடைப்பந்து குழு செயலாளர் முகமது கமாலுதீனிடம் தகவல் தெரிவித்து பதிவு செய்துகொள்ளலாம். கூடைப்பந்து போட்டி நடைபெறும், 22 முதல், 27 வரை நாள்தோறும், ஐந்து வீரர், வீராங்கனைகள் வரவழைக்கப்பட்டு, பதக்கம் அணிவித்து பாராட்-டப்பட உள்ளனர்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.