/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை மக்களுக்கு இடையூறான டிரான்ஸ்பார்மர் விரைவில் மாற்றம்
/
குளித்தலை மக்களுக்கு இடையூறான டிரான்ஸ்பார்மர் விரைவில் மாற்றம்
குளித்தலை மக்களுக்கு இடையூறான டிரான்ஸ்பார்மர் விரைவில் மாற்றம்
குளித்தலை மக்களுக்கு இடையூறான டிரான்ஸ்பார்மர் விரைவில் மாற்றம்
ADDED : மார் 06, 2024 06:31 AM
குளித்தலை : குளித்தலை பஸ் ஸ்டாண்டு, காந்தி சிலை எதிரில் திருச்சி பஸ் நிறுத்தம் நிழற்கூடம் அருகே பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருக்கும் டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யவேண்டும் என, பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், டிரான்ஸ்பார்மரை மாற்றம் செய்ய வேண்டும் என்றால், நகராட்சி நிர்வாகம் அதற்குரிய தொகையை செலுத்த வேண்டும் என மின் வாரியம் தெரிவித்தது. இதையடுத்து, தொகையை நகராட்சி நிர்வாகம் செலுத்தியது.
இந்நிலையில் இடையூறாக இருந்த டிரான்ஸ்பார்மரை போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான உள் பகுதியில் டிரான்ஸ்பார்மர் மாற்றி வைக்க முடிவு செய்தனர். இந்த இடத்தை நகராட்சி கமிஷனர் நந்தகுமார், மின் வாரிய உதவி பொறியாளர் நடராஜன், நெடுஞ்சாலை ஆர்.ஐ., சேகர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.விரைவில் டிரான்ஸ்பார்மர் மாற்றம் செய்யப்படும் என, மின் வாரியம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.