/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சுப நிகழ்ச்சிகள் இல்லாததால் வெற்றிலை விலை சரிவு
/
சுப நிகழ்ச்சிகள் இல்லாததால் வெற்றிலை விலை சரிவு
ADDED : ஜன 04, 2024 11:29 AM
கரூர்: சுப நிகழ்ச்சிகள் இல்லாததால் வெற்றிலை விலை குறைந்துள்ளது.
கரூர் மாவட்டத்தில், லாலாப்பேட்டை, மகிளிப்பட்டி, சிந்தலவாடி, கருப்பத்துார், வதியம், மணத்தட்டை, குளித்தலை, மரு துார், புகழூர், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் வெற்றிலை விவசாயம் நடக்கிறது.
காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு, கிளை வாய்க்கால்களில் எதிர்பார்த்த அளவுக்கு தண்ணீர் செல்வதாலும், நடப்பாண்டு வெற்றிலை சாகுபடி அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த கார்த்திகை மாத துவக்கத்தில் இருந்து, கரூர் மாவட்டத்தில் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், மார்கழி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட, சுப நிகழ்ச்சிகள்
இல்லாததால் விலை குறைந்துள்ளது.
இதுகுறித்து, புகளூர் வட்டார வெற்றிலை விவசாயிகள்
கூறியதாவது:
காவிரியாற்றில் தண்ணீர் செல்வதால், நடப்பாண்டு தண்ணீர் தட்டுபாடு இல்லை. இதனால், வெற்றிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும், வெற்றிலைக்கு கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன், இருந்த விலை தற்போது இல்லை.
நடப்பு மார்கழி மாதத்தில், திருமணம் உள்ளி ட்ட சுப விசேஷங்கள் இல்லாததால் விலை குறைந்துள்ளது. கடந்த வாரம், 104 கவுளி கொண்ட வெற்றிலை இளம்பயிர், 6,000 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாகவும், கற்பூர வெற்றிலை இளம்பயிர், 4,000 ரூபாயில் இருந்து, 2,500 ரூபாயாகவும் விலை குறைந்துள்ளது. அதேபோல், வெற்றிலை முதியம் பயிர், 3,000 ரூபாயில் இருந்து, 2,500 ரூபாய்க்கும், கற்பூர வெற்றிலை முதியம் பயிர், 2,000 ரூபாயில் இருந்து, 1,250 ரூபாய்க்கும் விலை குறைந்துள்ளது.
இவ்வாறு கூறினர்.