/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : ஜூன் 09, 2025 04:23 AM
கரூர்: கரூர், முத்துராஜபுரத்தில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில், சமீபத்தில் புனரமைப்பு பணிகள் தொடங்கின.
பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த, 6ல் விநாயகர் பூஜை-யுடன், மஹா கும்பாபிஷேக விழா தொடங்கியது. பின், முக்கிய வீதி வழியாக தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, நான்கு கால யாக சாலை பூஜை, சிறப்பு யாகம், கலசாபிஷேகம் ஆகி-யவை நடந்தன. நேற்று காலை, 9:00 மணி முதல், 10:00 மணிக்குள் ஆனந்த கிருஷ்ணன் ஆச்சாரியார் தலைமையில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழி-பட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில், கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், மண்டல குழு தலைவர்கள் ராஜா, கனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ், மாநகர தி.மு.க., அவை தலைவர் தங்-கவேல், பகுதி செயலாளர் குமார், செயற்குழு உறுப்பினர் செந்தில், வார்டு செயலாளர் அன்பு ரத்தினம், வணிகர் நல வாரிய உறுப்பினர் வெங்கட்ராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.
வரும், 15ல், கரூர் திருவள்ளுவர் மைதானத்தில், இரவு, 7:00 மணிக்கு செந்தில்கணேஷ், ராஜ லட்சுமி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை பகவதி அம்மன் கோவில் கமிட்டியாளர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.