/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தமிழ் மொழி தேர்வில் பரணி பார்க் கல்வி குழும மாணவ, மாணவியர் தேர்ச்சி
/
தமிழ் மொழி தேர்வில் பரணி பார்க் கல்வி குழும மாணவ, மாணவியர் தேர்ச்சி
தமிழ் மொழி தேர்வில் பரணி பார்க் கல்வி குழும மாணவ, மாணவியர் தேர்ச்சி
தமிழ் மொழி தேர்வில் பரணி பார்க் கல்வி குழும மாணவ, மாணவியர் தேர்ச்சி
ADDED : ஜன 23, 2025 06:25 AM
கரூர்: தமிழக அரசு நடத்தி வரும் தமிழ் மொழி தேர்வில், கடந்த மூன்று ஆண்டுகளில் கரூர் பரணி பார்க் கல்வி குழும மாணவ, மாணவியர், 235 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதுகுறித்து, கல்வி குழுமத்தின் முதன்மை முதல்வர் ராமசுப்பிர-மணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு கடந்த, 2022 முதல், அனைத்து வகை பள்-ளிகளிலும், பிளஸ் 1 மாணவ, மாணவியர் பங்கு பெறும் தமிழ் மொழி, இலக்கிய திறனறிதல் தேர்வு நடத்தி வருகிறது.
இந்த தேர்வில், கரூர் பரணி பார்க் பள்ளி குழுமத்தின் மாணவ, மாண-வியர், 2022, 2023, 2024 ஆகிய மூன்று ஆண்டுகளில், 235 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாணவ, மாணவியர், 84 லட்-சத்து, 60 ஆயிரம் ரூபாயை தமிழக அரசின் பரிசு தொகையாக பெற்றுள்ளனர். இதை தவிர, தமிழ் சங்க இலக்கியத்தின், 36 நுால்-களையும், தமிழ் எழுத்து வடிவில், கையெழுத்து பிரதி புத்தகங்க-ளாக, ஆசிரியர்களும், மாணவ, மாணவியரும் தொகுத்துள்ளனர். கடந்தாண்டு அகில இந்திய அளவில், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், பரணி வித்யாலயா மாணவர்கள், ஐந்து பேர் தமிழ் மொழியில், 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், பள்ளி முதல்வர்கள் சுதாதேவி, சேகர் ஆகி-யோருக்கு நடந்த பாராட்டு விழாவில், பள்ளி குழும தாளாளர் மோகனசுந்தரம், செயலாளர் பத்மாவதி, அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.