/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாரத சாரண, சாரணியர் பொதுக்குழு கூட்டம்
/
பாரத சாரண, சாரணியர் பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜன 10, 2025 01:12 AM
குளித்தலை, : குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் தனியார் கல்லுாரியில் குளித்தலை பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் தலைவர் சக்திவேல் தலைமையில் நடந்தது.
கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகானந்தம் முன்னிலை வகித்தார். சாரண இயக்க பாடலுடன் கூட்டம் தொடங்கியது. மாவட்ட பயிற்சி ஆணையர் புருசோத்தமன் வரவேற்றார். புதிதாக பொறுப்பேற்றவர்கள், சாரண உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆண்டறிக்கை வாசித்தார். முதன்மை ஆணையர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பக்தவச்சலம் வாழ்த்தி பேசினார். பின்னர் சாரண, சாரணிய இயக்கத்தின் பல்வேறு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட ஆணையர்கள் ரத்தினம், மகாலிங்கம், நித்யா, பவ்யா, கிருஷ்ணமூர்த்தி உட்பட சாரண, சாரணிய ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட பண்டக காப்பாளர் காத்தமுத்து நன்றி கூறினார்.