ADDED : ஏப் 30, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:
கரூர் மாவட்ட, தமிழ் வளர்ச்சி துறை சார்பில், பாவேந்தர் பாரதிதாசன், 134 வது பிறந்த நாள் விழா, ஜவஹர் பஜாரில் உள்ள கரூவூர் புலவர்கள் நினைவு துாண் பகுதியில் நடந்தது.
அதில், 12 கரூவூர் புலவர்கள் நினைவு துாணுக்கு, ஆர்.டி.ஓ., முகமது பைசல் மாலை அணிவித்து மலர் துாவி, மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ஜோதி, கரூர் தாசில்தார் குமரேசன், மண்மங்கலம் தாசில்தார் மோகன் ராஜ், திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன், கவிஞர் செல்வம், உள்பட பலர் பங்கேற்றனர்.

