/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலை, நாடகமேடை பணிகளுக்கு பூமி பூஜை
/
சாலை, நாடகமேடை பணிகளுக்கு பூமி பூஜை
ADDED : ஜூன் 26, 2025 01:41 AM
கிருஷ்ணராயபுரம், மேட்டு மகாதானபுரம் பஞ்சாயத்தில், புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம் எம்.ஏல்.ஏ., சிவகாமசுந்தரி தலைமை வகித்தார்.
மேட்டுமகாதானபுரம் கடைவீதி பகுதியில் இருந்து, மாரியம்மன் கோவில் வரை சாலை உள்ளது. இதில் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து, மிகவும் மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
சாலையை புதுப்பிக்கும் வகையில், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலர் ரவிராஜா, கிருஷ்ணராயபுரம் யூனியன் அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.* கீழ மாயனுார் பகுதியில், விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் புதிய நாடக மேடை கட்டுதல் பணிக்கான பூமி பூஜை, எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தலைமையில் நடந்தது.