ADDED : ஆக 12, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், மலையாண்டிப்பட்டி கிராமத்தில், புதிய சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை மாரியம்மன் கோவில் அருகில் நடந்தது.
குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட, பாப்பகாப்பட்டி பஞ்சாயத்து மலையாண்டிப்பட்டி கிராமத்தில், மாரியம்மன் கோவில் முன்பாக புதிய சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. குளித்தலை சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, சமுதாயக்கூடம் கட்டப்படுகிறது. கிருஷ்ணராயபுரம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், கிருஷ்ணராயபுரம் தெற்கு தொகுதி தி.மு.க., ஒன்றிய செயலர் கரிகாலன், பாப்பகாப்பட்டி பஞ்சாயத்து செயலாளர் மகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.