/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
/
தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
ADDED : செப் 20, 2024 01:40 AM
தார்ச்சாலை அமைக்கும்
பணிக்கு பூமி பூஜை
குளித்தலை, செப். 20-
குளித்தலை அடுத்த, நெய்தலுார் பஞ்., சின்னகவுண்டம்பட்டியில் நபார்டு நிதி உதவியாக, 18 லட்சத்து, 42 ஆயிரம் மதிப்பில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் ஆர்.டி.மலை விராச்சிலை ஈஸ்வரர் கோவில் தேரடி வீதியில், தார்ச்சாலை அகலப்படுத்தும் பணி, ஒன்றிய பொது நிதியில், 72 லட்சம் மதிப்பிலும், வடசேரி பஞ்., காவல்காரன்பட்டி முதல் பாலசமுத்திரபட்டியில் தார்ச்சாலை அமைக்க, 2 கோடியே, 21 லட்சம் மதிப்பில் பூமி பூஜை செய்யப்பட்டது. யூனியன் குழு தலைவர் சுகந்திசசிகுமார் தலைமை வகித்தார். யூனியன் கவுன்சிலர் சின்னையன், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, பஞ்., தலைவர்கள் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., மாணிக்கம் பூமி பூஜை செய்து, பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, சின்னபனையூரில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஆர்.டி.மலை விராச்சிலை ஈஸ்வரர் கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் சங்க பொறுப்பாளர்கள் மாணிக்கம், நாகராஜன், டாக்டர் கலையரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.