ADDED : நவ 13, 2024 03:50 AM
கரூர்:பல்வேறு பணிகளை பூமி பூஜை செய்து அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ தொடங்கி வைத்தார்.
க.பரமத்தி
ஒன்றியம் முன்னுார் ஊராட்சிக்குட்பட்ட மோளபாளையம் முதல் நொய்யல்
சாலை வரை, பழுதடைந்த தார் சாலையை மேம்படுத்த வேண்டும். சாமிநாதபுரம்
முதல் காட்டுமுன்னுார் சாலை வரை உள்ள மண்சாலையை தார்சாலையாக
மாற்றிடவும், காந்திபுரம் காலனி வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்
என அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து,
மோளபாளையம் முதல் நொய்யல் சாலை, 18 லட்சம் ரூபாய், சாமிநாதபுரம் முதல்
காட்டுமுன்னுார் சாலை மண்சாலையை தார்சாலையாக மாற்ற, 30 லட்சம்
ரூபாய், காந்திபுரம் காலனியில் வடிகால் வசதி, 5.4 லட்சம் ரூபாய்,
வேலம்பாளையத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க, 6.5 லட்சம்
ரூபாய் மதிப்பில் பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
இதை, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ தலைமை வகித்து பணிகளை தொடங்கி
வைத்தார்.நிகழ்ச்சியில், பஞ்., தலைவர் ராஜ்குமார். மாவட்ட கவுன்சிலர்
கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் பூபதி, உள்பட பலர் பங்கேற்றனர்.

