ADDED : ஏப் 17, 2026 06:06 AM
அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம், ஆனந்தபுரத்தை சேர்ந்த முருகன் என்பவர், கடந்த ஓராண்டாக கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடன் மனைவி மற்றும் 4 வயது பெண் குழந்தை உள்ளனர். அதே பகுதியில் உள்ள மற்றொரு சூளையில், பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தை சேர்ந்த ராகேஷ் சிங், 20, என்ற இளைஞர் வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த, 12-ம் தேதி ராகேஷ் சிங், அந்த சிறுமியுடன் விளையாடி விட்டு, வீட்டில் விட்டு சென்றுள்ளார். அப்போது சிறுமி, தன் தாயிடம் அந்த இளைஞர் தொந்தரவு செய்ததாக கூறியுள்ளார். அக்கம் பக்கத்தினர் மறைந்திருந்த இளைஞரை பிடித்து, போலீசில் ஒப்படைந்தனர்.
க.பரமத்தி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, ராகேஷ் சிங்கை போக்சோவில் கைது செய்தனர்.
