ADDED : ஏப் 07, 2026 02:31 AM
அ நிறம் | அளவு
குளித்தலை, குளித்தலை அடுத்த வைகைநல்லுார் பஞ்., ஐய்யனேரி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன், 33. நகராட்சி அலுவலகம் அருகே உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கை கடந்த 4ல் காலை 10:00 மணியளவில் கடை முன் நிறுத்தியிருந்தார்.
வேலை முடித்து விட்டு இரவு 9:00 மணிக்கு பார்த்தபோது. பைக்கை காணவில்லை. பல இடங்களை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. மகேந்திரன் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .
