/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக் திருடிய வழக்கு; இருவர் அதிரடி கைது
/
பைக் திருடிய வழக்கு; இருவர் அதிரடி கைது
ADDED : அக் 26, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவம-னையில், பைக் திருடியதாக இரண்டு வாலிபர்-களை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், பணிக்காரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஷால், 20; இவர் கடந்த, 24 ல் காலை கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், யமஹா பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து சென்று பார்த்த போது, பைக்கை காணவில்லை.
இதுகுறித்து, விஷால் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, பைக்கை திருடியதாக திருச்சி மாவட்டம், உறையூரை சேர்ந்த கார்த்திக், 25; கண்ணன், 27; ஆகிய, இரண்டு பேரை பசுபதிபா-ளையம் போலீசார் கைது செய்தனர்.