/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக் திருட்டு எலக்ட்ரீஷியன் புகார்
/
பைக் திருட்டு எலக்ட்ரீஷியன் புகார்
ADDED : ஜூலை 30, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் டி.இடையபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக், 29. எலக்ட்ரீஷியன். இவர் தனக்கு சொந்தமான, ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கை கடந்த, 18ம் தேதி இரவு வீட்டின் முன் நிறுத்திவிட்டு, அதிகாலையில் பார்த்தபோது காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து கார்த்திக் கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.