/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெவ்வேறு சம்பவங்களில் பைக் திருடர்கள் கைது
/
வெவ்வேறு சம்பவங்களில் பைக் திருடர்கள் கைது
ADDED : ஜன 10, 2025 01:27 AM
கரூர் : கரூர், ரெட்டிபாளையம் எழில் நகரை சேர்ந்தவர் மனோஜ்குமார், 25. கடந்த, 5ல் வீட்டின் வெளியில் பைக்கை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. கரூர் டவுன் போலீசார் விசாரித்து, நேற்று முன்தினம் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த பிரபு, 25, என்பவரை கைது செய்தனர்.
இதுபோல, கடவூர் அருகில் தரகம்பட்டியை சேர்ந்தவர் மகேஷ், 26. நேற்று முன்தினம், கரூர் வடக்கு காந்திகிராமத்தில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டின் வெளியே நிறுத்தி சென்ற பைக்கை காணவில்லை. பசுபதிபாளையம் போலீசார் நடத்திய விசாரணையில், பசுபதிபாளையத்தை சேர்ந்த சிவகிருஷ்ணன், 27, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

