/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா
/
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா
ADDED : ஜன 04, 2024 11:27 AM
கரூர்: கரூர் மாவட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பில், சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்ட பொம் மனின், 265 வது பிறந்த நாள் விழா, மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது.
வீரபாண்டிய கட்ட பொம்மன் பண்பாட்டு கழக நிர்வாகிகள் பங்கேற்ற, தேவராட்டம் சுக்காலியூர் ரவுண்டானா முன் நடந்தது. ஏராளமான தொண்டர்கள் தேவராட்டம் ஆடினர். அதை தொடர்ந்து, தோரணக்கல்பட்டியில் உள்ள, வீரபாண்டிய கட்ட பொம்மன் சிலை க்கும், மாலை அணிவிக்கப்பட்டது.
மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, முன்னாள் கவுன்சிலர் ஏகாம்பரம் உள்பட பலர் பங்கேற்றனர்.
* கரூர் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்த வீரபாண்டிய கட்ட பொம்மன் பிறந்த நாள் விழாவில், அவரது உருவபடத்துக்கு, எம்.எல்.ஏ., இளங்கோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநகராட்சி மேயர் கவிதா, மாநகர துணை செயலாளர் பாண்டியன், பகுதி செயலாளர்கள் ஜோதிபாசு, சுப்பிர மணியன் உள்பட, தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
* தோரணகல்பட்டி விழாவில், அவரது சிலைக்கு மாவட்ட, பா.ஜ., தலைவர் செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பொதுச்செயலாளர் சக்திவேல் முருகன், வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் ஏகாம்பரம் உள்பட பலர்
பங்கேற்றனர்.