ADDED : செப் 21, 2024 02:53 AM
கரூர்: கரூர் அருகே, காட்டெருமை உலா வருவ தால், பொதுமக்கள் பீதி-யடைந்துள்ளனர்.கரூர் மாவட்டம், நெரூர் பகுதி காவிரியாற்றையொட்டி உள்ளது. அந்த பகுதியில் நெல், வாழை, கோரை புல் ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை நெரூர் காவிரி-யாற்று பகுதியில், காட்டெருமை ஒன்று தனியாக உலா வருவதா க, பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
காட்டெருமை குறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட வனத்-துறை ஊழியர்கள், நெரூர் காவிரியாற்று பகுதியில் முகாமிட்டுள்ளனர். காட்டெ-ருமையை கண்டுபிடித்து மீண்டும் வனப்பகுதியில், விரட்டும்
பணியில் வனத் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து, கரூர் மாவட்ட வன அலுவலர் சண்முகம் கூறியதா-வது: நாமக்கல் மாவட்ட வனப்பகுதியில் இருந்து, தண்ணீரை தேடி
காட்டெருமை, காவிரியாறு வழியாக கரூர் மாவட்டத்-துக்குள் நுழைந்து இருக்கலாம். இதனால், பொதுமக்கள் அச் சப்-பட
தேவையில்லை. காட்டெருமையை மீண்டும் வனப்பகுதிக்கு, திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.