/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூருக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன் வாக்குறுதி

ADDED : ஏப் 18, 2024 07:03 AM
கரூர் : கரூர் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன், கரூர் ராயனுாரில் இருந்து, செங்குந்தபுரம், 80 அடி சாலை வரை வாகன பேரணியில் மக்களிடம் ஓட்டு கேட்டு சென்றார்.
அப்போது, அவர் பேசியதாவது:நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் தேர்தல். தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் பிரதமர் யார் என்று கூறி வாக்கு சேகரிக்க முடியாத நிலையில் உள்ளனர். இந்த மாவட்டத்தில் இரண்டு திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள் அமைச்சராக இருந்து, சொத்து குவித்தார்களே தவிர, மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்த்ததில்லை. பிரதமர் மோடி அரசு அனைவருக்கும் வீடு, ரேஷனில், 15 கிலோ அரிசி, பிரதமரின் மருத்துவ காப்பீடு போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
கரூரில், மத்திய அரசின் நிதி உதவியுடன் புதிய குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும். கரூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இணைத்து, சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கரூர்-கோவை ஆறு வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும். பஸ் பாடி தொழிலுக்கு ஏ.ஐ.எஸ்., சான்றிதழ் எளிதாக பெற வழிவகை செய்யப்படும் உள்பட பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது. பா.ஜ., ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன், இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.