/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
துணை ஜனாதிபதி தேர்வு பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
/
துணை ஜனாதிபதி தேர்வு பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
ADDED : செப் 11, 2025 01:24 AM
கரூர் :துணை ஜனாதிபதி தேர்தல் வெற்றி கொண்டாட்டம், பா.ஜ., சார்பில், கரூர் பஸ் ஸ்டாண்ட் மனோகரா ரவுண்டானா அருகில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமைவகித்தார்.
நாட்டின், 15வது துணை ஜனாதிபதியாக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்டார். துணை ஜனாதிபதி தேர்தலில், 452 ஓட்டுகளை பெற்று, 'இண்டி' கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை வீழ்த்தினார். இதற்காக, பட்டாசு வெடித்து கொண்டாடினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.வட்ட பொதுச்செயலார்கள் செல்வராஜ், சாமிதுரை, துணை தலைவர் சக்திவேல் முருகன், ஆறுமுகம், மாவட்ட செயலாளர்கள் முருகேசன், வெங்கடாசலம், மத்திய நகர தலைவர் சரண்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.