sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

 எம்.பி., அவதுாறு வழக்கில் பா.ஜ., நிர்வாகிக்கு ஜாமின்

/

 எம்.பி., அவதுாறு வழக்கில் பா.ஜ., நிர்வாகிக்கு ஜாமின்

 எம்.பி., அவதுாறு வழக்கில் பா.ஜ., நிர்வாகிக்கு ஜாமின்

 எம்.பி., அவதுாறு வழக்கில் பா.ஜ., நிர்வாகிக்கு ஜாமின்


ADDED : பிப் 25, 2026 05:25 AM

Google News

ADDED : பிப் 25, 2026 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: காங்., -- எம்.பி., ஜோதிமணி குறித்து, அவதுாறாக பேசிய வழக்கில், கரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில் நாதனுக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கி, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கரூர் தலைமை தபால் நிலையம் முன், பா.ஜ., சார்பில், பிப்., 10ல் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், கரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில் நாதன், காங்., கட்சியைச் சேர்ந்த கரூர் எம்.பி., ஜோதிமணி குறித்து அவதுாறாகவும், ஆபாசமாகவும் பேசியதாக, மாவட்ட காங்., கட்சி தலைவர் ரமேஷ், கரூர் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

செந்தில் நாதன் மீது, ஐந்து பிரிவுகளின் கீழ், கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், முன் ஜாமின் கேட்டு, செந்தில் நாதன் தரப்பில், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி இளவழகன், ''கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில், தினமும் காலையில் செந்தில் நாதன் கையெழுத்திட வேண்டும்,'' என, முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us