/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பா.ஜ., நிர்வாகி கணவர் விபசார வழக்கில் கைது
/
பா.ஜ., நிர்வாகி கணவர் விபசார வழக்கில் கைது
ADDED : ஆக 25, 2025 03:39 AM
கரூர்: கரூர் அருகே விபசார வழக்கில், பா.ஜ., நிர்வாகி கணவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர், தான்தோன்றிமலை ஊரணிமேடு பகுதியில், நேற்று முன்தினம் இரவு ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., நந்தகோபால் உள்ளிட்ட போலீசார் குறிப்பிட்ட வீட்டுக்கு அருகே நின்று கண்காணித்தனர்.
அப்போது வீட்டுக்குள் ஒரு பெண்ணுடன் செல்ல முயன்ற, கரூர் மாவட்டம் மாயனுாரை சேர்ந்த ரகுபதி, 48; வீட்டில் இருந்த மற்றொரு பெண்ணை பிடித்து விசாரித்தனர். இதில் மூவரும் விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மூன்று பேரையும் கைது செய்து அழைத்து சென்றனர். ரகுபதியின் மனைவி கற்பகவள்ளி, கரூர் மாவட்ட பா.ஜ., செயலாளராக உள்ளார்.இதுகுறித்து கரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில்நாதன் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களை கண்டுகொள்ளாத போலீசார், பா.ஜ., நிர்வாகி கணவரை பொய் வழக்கில் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக மாநில தலைவர் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதன் பின்னணியில் முக்கிய புள்ளி ஒருவர் உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.