/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பா.ஜ., நிறுவன தினம் கரூரில் கொண்டாட்டம்
/
பா.ஜ., நிறுவன தினம் கரூரில் கொண்டாட்டம்
ADDED : ஏப் 07, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூரில் உள்ள, பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில், அக்கட்சி நிறு-வன தின கொண்டாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் செந்தில்நாதன், கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின், பாரத அன்னைக்கு புஷ்பாஞ்சலி செலுத்திய பின், கட்சிக்காக இன்னுயிரை நீத்த தலைவர்களை போற்றி வணங்கி மரியாதை செலுத்தினார். பின், அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து கட்சியின் வர-லாறு மற்றும் அமைப்பு ரீதியான பணிகள் பற்றி நிர்வாகிகள் விளக்கி பேசினர்.
மாவட்ட பொதுச் செயலர்கள் சக்திவேல் முருகன், ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாவட்ட செயலர் செல்-வராஜ், மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

