/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட பா.ஜ.,வலியுறுத்தல்
/
டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட பா.ஜ.,வலியுறுத்தல்
ADDED : டிச 31, 2024 07:20 AM
கரூர்: நெரூர் தென்பாகம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, எம்.ஜி.ஆர்., நகரில் செயல்படும் டாஸ்மாக் வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்காமல், நிரந்தரமாக மூட வேண்டும் என, பா.ஜ., கரூர் கிழக்கு ஒன்றிய தலைவர் சரவணகுமார் தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அதில், கூறியிருப்பதாவது: கரூர் ஊராட்சி ஒன்றியம், நெரூர் தென்பாகம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர்., நகர் அருகில் உள்ள டாஸ்மாக் கடை உள்ளது. அங்கு, பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதால் இடமாற்றம் செய்ய இருக்கின்றனர். அங்கு செயல்பட்டு வந்த டாஸ்மாக், நெரூர் வட பாகம் பஞ்சாயத்தில், பார்க் நகர் பஸ் ஸ்டாப் அருகில் மாற்ற உள்ளதாக தெரிகிறது. தற்போது அமையும் இடமானது, கரூரிலிருந்து நெரூர் செல்லும் மெயின் ரோட்டில் உள்ளது. இதனால், அடிக்கடி விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். குடியிருப்பு பகுதியில் அமைய இருப்பதால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும். இதற்கு நிரந்தர தீர்வாக, நெரூர் எம்.ஜி.ஆர்., நகரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.